சர்வதேச உல்லாச விடுதியொன்றுக்காக கொழும்பிலிருந்த இராணுவத் தலைமையகத்தை அப்புறப்படுத்தியதால், அரசாங்கத்துக்கு வருடாந்தம் 500 கோடி ரூபா செலவு ஏற்பட்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை, கொழும்புக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் கடந்த அரசாங்கம் எவ்வித முன்னேற்பாடுகளும் இன்றி இராணுவத் தலைமையகத்தை திடீரென இடமாற்றம் செய்ததற்கான காரணத்தை கண்டறிவதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவொன்றின் அவசியம் தொடர்பிலும், இச்சந்தர்ப்பத்தில் அமைச்சரவை உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு யோசனையொன்றை முன்வைத்துள்ளனர்.
இராணுவத்துக்கென தலைமை அலுவலகம் ஒன்று இல்லாமையினால் தற்போது 15 கட்டடங்களில் அதன் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டிய நிலை உருவாகியிருப்பதுடன், நேர விரயம், செலவு மற்றும் கொழும்புக்கு பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் நேற்றுக் காலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு டார்லி வீதியிலுள்ள சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
வெளிநாட்டு ஹொட்டல் அமைப்பதற்காக முன்னாள் ஆட்சியாளர்கள் இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த 10 ஏக்கர் காணியை 125 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சீனாவுக்கு விற்பனை செய்தனர். இந்த அரசாங்கம் காணியை குத்தகைக்கே வழங்கியுள்ளது. ஆனால் கடந்த அரசாங்கம் காணிகளை சீனர்களுக்கு விற்பனை செய்தது என்றும் அமைச்சர் விளக்கமளித்தார்.
"கொழும்பின் முக்கியமான இடத்தில் இராணுவ தலைமையகம் அமைந்திருந்தது. இது பாதுகாப்புடன் சம்பந்தப்பட்டது. எனினும் கடந்த அரசாங்கம் இராணுவத் தலைமையகம் அமைந்திருந்த காணியை வெளிநாட்டு ஹொட்டல் வழங்குவதற்கு திடீர் தீர்மானம் எடுத்ததனால், அதனை 15 கட்டடங்களில் செயற்படுத்த வேண்டிய நிலை தற்போது உருவாகியுள்ளது. இக்கட்டடங்களுக்காக வருடாந்தம் 500 கோடி ரூபாவை அரசாங்கம் கூலியாக செலுத்தி வருகிறது." என்றும் அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின்போது வீண் விரயம் பற்றி பேசுகையிலேயே பாதுகாப்பு அமைச்சரென்ற ரீதியில் ஜனாதிபதி இக்கருத்தை முன்வைத்துள்ளார்.

0 Responses to இராணுவத் தலைமையகத்தை கொழும்பிலிருந்து மாற்றியதால் வருடாந்தம் 500 கோடி ரூபா செலவு: மைத்திரிபால சிறிசேன