Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அண்மையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஜிம் மேத்திஸ் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்குச் செல்லவுள்ளார். இதன்போது அவர் ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் புதிய நிலைப்பாட்டை தெரிவித்து அதற்கான ஆதரவைத் தர பாகிஸ்தானை வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப் படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்க மத்திய புலனாய்வுத் துறையான சி ஐ ஏ இன் இயக்குனர் மைக் பொம்பெயோ பாகிஸ்தானுக்குக் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் பாகிஸ்தான் அரசால் அங்கிருக்கும் தீவிரவாதிகளின் பதுங்கு நிலைகளை அழிக்க முடியாவிட்டால் அவை அனைத்தையும் அமெரிக்கா தனித்து செயற்பட்டே அழித்து விடுகின்றோம் என்றுள்ளார். இத்தகவல் பாகிஸ்தானின் டாவ்ன் பத்திரிகையில் வெளியாகி உள்ளது.

மேலும் இது தொடர்பில் அதிபர் டிரம்பின் நிலைப்பாட்டை பாதுகாப்புச் செயலாளரான ஜிம் மேத்திஸ் தனது பாகிஸ்தான் விஜயத்தின் போது உறுதிபட முன் வவைப்பார் என்றும் பொம்பெயோ தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்கா இவ்விடயத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கையில் தங்கியிராது சுயமாகச் செயற்பட்டே அங்கிருக்கும் தீவிரவாதிகளின் நிலைகளை அழிக்கவும் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

2004 ஆம் ஆண்டு முதல் சி ஐ ஏ பாகிஸ்தானின் ஃபட்டாஹ் உட்பட சில தீவிரவாதிகளின் பதுங்கு நிலைகள் மீது டிரோன் தாக்குதல்களை சுயமாக அவ்வப்போது மேற்கொண்டு வருகின்றது. இதற்குப் பாகிஸ்தான் அரசு கண்டனம் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to தீவிரவாதிகளின் பதுங்கு நிலைகளை அழிக்கா விட்டால் நாம் அதைச் செய்கின்றோம்: பாகிஸ்தானுக்கு சி.ஐ.ஏ வலியுறுத்து!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com