இரணைமடுக் குளத்திலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்கும் திட்டம் அரசியல் பிரச்சினைகளால் தடைப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
“பல வருடங்களாக யாழ்ப்பாண மக்கள் குடிநீர் பிரச்சினையினால் அவதிப்பட்டு வருகின்றனர். இரணைமடு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு நீர்கொண்டு செல்லும் முயற்சி தடைப்பட்டுள்ளதால், இது தொடர்பில் வேறு திட்டங்களினூடாக நீர்வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கூட்டு எதிரணி (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளிக்கும் போதே ரவூப் ஹக்கீம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “இரணைமடுவினூடாக யாழ்ப்பாணத்திற்கு நீர்கொண்டு செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை தடைப்பட்டுள்ளன. கிளிநொச்சி விவசாயிகள் தொடர்பில் பிரச்சினை காணப்படுகிறது. இதனால் இரணைமடு நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கு அரசியல் ரீதியான பிரச்சினைகள் காணப்படுகின்றன. இதனால் பல மாற்று வழிகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது. நீர் தொடர்பான இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to இரணைமடுவிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு குடிநீர் வழங்கும் திட்டத்துக்கு அரசியல் தடைகள்: ரவூப் ஹக்கீம்