“நாட்டை மீண்டும் பிளவுபடுத்தவும், நாட்டில் இனவாதத்தை தூண்டவும் பலரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதை எண்ணி நான் கவலையடைகின்றேன். இறந்த காலத்தை அழித்துக்கொண்டது போல், எதிர்காலத்தையும் அழித்துக்கொள்ள இடமளிக்க முடியாது. ” என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
“நாடு முன்னோக்கி பயணிக்க வேண்டுமானால் அதற்கு ஒரு நோக்கம் மற்றும் இலக்கு என்பன அவசியமாவதோடு, நாட்டு பற்றும் அவசியப்படுகின்றது.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பேசும் போதே சபாநாயகர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இலங்கை தற்போது பின்னடைந்துள்ளதை மாற்ற முடியுமா? என்பதே எமது தற்போதைய எதிர்பார்ப்பாகவுள்ளது. தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் ஊழல் தொடர்பில் ஆராய ஒரு ஆணைக்குழு என பல சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்கி அவற்றை செயற்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளோம்.
அதற்கமைய எதிர்காலத்தில் நீதியானதும், சுயாதீனதுமான தேர்தல் ஒன்று நடைபெறும் என நம்புகின்றேன். முன்னைய ஆட்சியில் தேர்தல் நடைபெற்ற விதம் தொடர்பில் நீங்கள் அறிவீர்கள். இன்று அவ்வாறு அல்ல அரச சொத்துக்களை வீணாக பயன்படுத்த முடியாது என்பதோடு பண வீண் விரயத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் நடைபெறுகின்றது.
அவ்வாறான சூழலில் மக்கள் தமது பிரதிநிதிகளை தமது விருப்பத்திற்கு ஏற்ப தெரிவு செய்வதற்கான சந்தர்ப்பம் உள்ளது. இந்த நிலையில் நாட்டை மீண்டும் பிளவுபடுத்த, நாட்டில் இனவாதத்தை தூண்ட பலர் பல முயற்சிகளை எடுத்து வருகின்றனர். அதை எண்ணி நான் கவலையடைகின்றேன். இறந்த காலத்தை அழித்துக்கொண்டது போல் எதிர்காலத்தையும் அழித்துக்கொள்ள இடமளிக்க முடியாது.
நாம் ஒவ்வொருவரும் பிறக்கும் போது இனத்தையோ மதத்தையோ கேட்பதில்லை. ஆகவே தேவையற்ற விதத்தில் நாட்டு மக்களை குழப்பி, அவர்களை தூண்ட்டிவிடுவோர் நாட்டுக்கு துரோகம் செய்பவர்களாகவே கருதப்படுவர்.” என்றுள்ளார்.

0 Responses to நாட்டில் இனவாதத்தைத் தூண்ட பலரும் முயற்சி: கரு ஜயசூரிய