நேற்று சனிக்கிழமை இரவு 8 மணியளவில் ஈரான் நிறுவனத்துக்குச் சொந்தமான 1 36 000 டன் பெட்ரோலிய கச்சா எண்ணெய்யுடன் புறப்பட்ட சரக்குக் கப்பல் ஒன்று 64 000 டன் உணவு தானியங்களைக் காவிக் கொண்டு வந்த ஹாங்கொங் சரக்குக் கப்பலுடன் சீனக் கடல் எல்லையில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் கடும் சேதம் ஏற்பட்டதுடன் 32 பேர் மாயமானதாகவும் அநேகமாக இவர்கள் இறந்திருக்கலாம் எனவும் அறிவிக்கப் பட்டுள்ளது. ஆயினும் ஹாங்காங் சரக்குக் கப்பலில் பயணித்த 21 பேரைப் பத்திரமாக மீட்டு விட்டதாக சீனக் கடலோர காவற் படையினர் தெரிவித்துள்ளனர். எண்ணெய்க் கப்பலில் பயணித்த மக்களைத் தேடும் பணியில் தற்போது 8 சீனக் கப்பல்களும் தென்கொரியாவின் ஒரு விமானம் மற்றும் கடலோர காவற்படைக் கப்பல் ஒன்றும் ஈடுபடுத்தப் பட்டுள்ளன.
பெட்ரோலிய கச்சா எண்ணெய்யை சுமந்து வந்த ஈரான் நிறுவனத்துக்குச் சொந்தமான சரக்குக் கப்பல் பனாமாவில் பதிவு செய்யப் பட்ட ஒன்றாகும். இது ஈரானில் இருந்து 1 36 000 டன் கச்சா எண்ணெய்யைச் சுமந்து கொண்டு தென்கொரியாவுக்குப் புறப்பட்டுச் சென்றது. மற்றைய ஹாங்காங் தானிய சரக்குக் கப்பல் அமெரிக்காவில் இருந்து சீனாவின் குவாங்டாங் நகருக்கு சுமார் 64 000 டன் உணவு தானியங்களுடன் சென்றது. இதன் போதே சீனாவுக்கு அண்மையில் நடுக்கடலில் இவை மோதி விபத்துக்குள் சிக்கின என்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to சீனக் கடல் எல்லையில் இரு சரக்குக் கப்பகள் மோதி பாரிய தீ விபத்து! : 32 பேர் மாயம்