Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

உலகின் 2 ஆவது மிகப் பெரிய பொருளாதார சக்தியும் முதலாவது மிகப் பெரிய ஏற்றுமதியாளருமான சீனாவுக்கு எதிர்வரும் 5 தொடக்கம் 10 வரையிலான வருடங்கள் சோதனைக் காலமாக அமையவுள்ளது.

ஏனெனில் சீனாவில் இறக்குமதி விகிதம் அதிகரித்து ஏற்றுமதி குறைவடைய உள்ளதாகவும் இதனால் சீனாவுக்கு இனிவரும் இக்காலப் பகுதியில் வணிக ரீதியில் குறிப்பிடத்தக்க பின்னடைவு ஏற்படவுள்ளதாகவும் முன்னால் மூத்த சீன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சீனாவின் தேசிய அபிவிருத்தி மற்றும் முன்னேற்ற கமிஷனனின் அக்கெடமியைச் சேர்ந்த முன்னால் பாதுகாப்புச் செயலாளர் ஷாங் யான்ஷெங் என்பவரே இக்கருத்தைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில் சீனா இனிமேல் தனது பொருளாதார முன்னேற்றத்துக்குக் கடந்த 30 வருடங்களில் நிலவியது போல் ஏற்றுமதியில் பெரும்பாலும் தங்கி இருக்க முடியாது என்றுள்ளார். ஏனெனில் உலகளாவிய ரீதியில் பாதுகாப்பியல் கருத்தியல் வளர்ந்து வருவதால் தான் இப்பின்னடவை சீனா சந்திக்க வேண்டி இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கு அடுத்த கட்டமாக வணிகத்தில் சமநிலையைப் பேணுவதில் திறந்த பொருளாதாரத்தை அதிகம் கடைப் பிடிக்க வேண்டிய தேவையும் அதிகரித்திருப்பதாக அவர் ஹாங் கொங் பத்திரிகை ஒன்றிட்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் இறக்குமதியை விருத்தி செய்வதும் சீனா உலகளாவிய ரீதியில் ஒரு சக்தியாக வளர்வதற்கு மிக முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார். சீனாவின் GAC என்ற அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் 2017 இல் அங்கு ஏற்றுமதி 10.8% வீதம் அதிகரித்து 15.33 டிரில்லியன் யுவான் ஆக இருந்ததாகவும் இறக்குமதி 18.7% வீதம் அதிகரித்து 12.46 டிரில்லியனாகவும் இருந்ததாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.

0 Responses to உலகின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக சீனாவின் சகாப்தம் முடிவுக்கு வருகின்றது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com