அமெரிக்க முன்னால் அதிபர் ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஈரானுடன் மேற்கொள்ளப் பட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் டிரம்ப் நிர்வாகம் திணிக்க நினைக்கும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்க முடியாது என ஈரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
பல வருடங்களாக ஈரான் வெளியுலகுக்குத் தெரியாது அணுவாயுதம் தயாரித்து வருகின்றது என்ற குற்றச்சாட்டின் கீழ் அதன் மீது சர்வதேசம் கடினமான பொருளாதாரத் தடைகளை விதித்திருந்தது.
இதற்கு ஒரு முடிவு கட்டும் வகையில் 2015 ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சிக் காலத்தில் ஐ.நா பொதுச் சபையில் வல்லரசு நாடுகளான அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, பிரான்ஸ், சீனா, மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகளுடன் ஈரான் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டது. இதன் பிரகாரம் ஈரானிலுள்ள அணுசக்தி நிலையங்களில் 20% வீதத்துக்கு அதிகமாக யுரேனியம் செறிவூட்டம் தடை செய்யப் பட்டும் பதிலுக்கு ஈரான் மீதான பொருளாதாரத் தடைகள் படிப்படியாக விலக்கிக் கொள்ளப் படுவது என்றும் ஒப்பந்தம் எட்டப் பட்டது. ஆனால் இந்த ஒப்பந்தம் திருத்தமானது அல்ல என்றும் இதனைக் கைவிடப் போவதாகவும் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்துத் தெரிவித்து வருகின்றார்.
முக்கியமாக இதே ஒப்பந்தத்தை அப்படியே பின்பற்ற வேண்டுமானால் ஈரான் மீதான நிபந்தனைகள் இன்னமும் கடுமையாக்கப் பட வேண்டும் எனவும் இதிலுள்ள பல பிழைகள் திருத்தப் பட வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்து வருகின்றார். இதற்கு ஈரான் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பில் ஈரானின் வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் தற்போது அமுலில் உள்ள அணுசக்தி ஒப்பந்தத்தில் எந்தவொரு திருத்தத்தை மேற்கொள்வதையும் இதனுடன் வேறு பிரச்சினைகளைத் தொடர்பு செய்வதையும் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

0 Responses to அணுசக்தி ஒப்பந்தத்தில் டிரம்ப் நிர்வாகம் திணிக்கும் எந்தவொரு மாற்றத்தையும் ஏற்க முடியாது! : ஈரான்