Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

2 ஆம் உலக மகா யுத்தத்தின் போது போடப்பட்டு வெடிக்காது இருந்த அபாயகரமான 500 Kg எடை கொண்ட வெடிகுண்டு பாதுகாப்பாக அகற்றப் பட்ட பின்னர் இலண்டன் சிட்டி விமான நிலையம் இன்று செவ்வாய்க்கிழமை மீளத் திறக்கப் பட்டுள்ளது.

பிபிசி இன் அறிவிப்புப் படி கிழக்கு விமான நிலைய விஸ்தரிப்புப் பணியின் போது ஞாயிற்றுக்கிழமை கிங் ஜோர்ஜ் தரிப்பிடத்துக்கு அருகே 15 மீட்டர் ஆழத்தில் நீருக்கடியில் இந்த குண்டு கண்டு பிடிக்கப் பட்டிருந்தது.

இதையடுத்து இந்த வெடிகுண்டைப் பாதுகாப்பாக அகற்றுவதற்காக திங்கட்கிழமை இவ்விமான நிலையத்தின் அனைத்து விமான சேவைகளும் ரத்து செய்யப் பட்டன. மேலும் இந்த அகற்றும் பணி நிமித்தம் சுமார் 16 000 பயணிகளும் அருகே வசித்து வந்த குடிமக்களும் வதிவிடங்களை விட்டு வெளியேற்றப் பட்டதால் அசௌகரியத்தை எதிர் நோக்கி இருந்தனர். திங்கட்கிழமை மாத்திரம் இந்த விமான நிலையத்தில் மொத்தம் 261 விமான புறப்பாடுகளும் வருகைகளும் ரத்தாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

தேம்ஸ் நதியில் 1.5 மீட்டர் நீளத்துக்குக் காணப் பட்ட இந்த வெடிகுண்டு ஜேர்மனியால் 2 ஆம் உலக யுத்தத்தின் போது போடப் பட்டதாகும். இது தற்போது பாதுகாப்பாக அகற்றப் பட்டுள்ளதுடன் இன்று செவ்வாய்க்கிழமை பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்யப் பட்டு செயல் இழக்கப் படவுள்ளது. 1940 ஆம் ஆண்டு செப்டெம்பர் முதல் 1941 மே மாதம் வரை இலண்டனில் ஜேர்மனியத் துருப்புக்கள் சுமார் 24 000 டன் எடை கொண்ட வெடி பொருட்கள் வரை போட்டதாகவும் இதில் 10% வீதமான வெடிகுண்டுகள் இன்னமும் வெடிக்கவில்லை எனவும் வரலாற்று அறிஞர்கள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to 500 Kg வெடிகுண்டு அகற்றப் பட்ட பின்னர் மீளத் திறக்கப் பட்டது இலண்டன் விமான நிலையம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com