Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“நான் பூ அல்ல., விதை. என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள், வளர்ந்து வருவேன்.” என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

“தமிழக அரசியலில் காகித பூக்கள் மலரலாம்; ஆனால், மணக்காது” என தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். இந்த விடயம் தொடர்பில் மதுரை வந்த கமல்ஹாசனிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதன்போது, “நான் பூ அல்ல., விதை.” என்று அவர் பதிலளித்துள்ளார்.

நாளை புதன்கிழமை கமல்ஹாசன் அரசியல் பயணம் துவங்க உள்ள நிலையில். தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதம்: தமிழக அரசியல் களத்தில் கவர்ச்சி காகிதப் பூக்கள் மலரலாம்; ஆனால் மணக்காது. திராவிட மொழி பெருமைக்கும், மக்கள் உரிமைக்கும் உணர்வூட்டும் ஆயிரங்காலத்து ஜீவாதார பயிர் திமுக. ஜீவாதார பயிரை பாதுகாக்கும் வேலியாக கோடிக்கணக்கான தொண்டர்களில் முன்னிற்கும் தொண்டனாக இருக்கிறேன்.பருவநிலை மாறும்போது சில பூக்கள் திடீரென மலரும். சில உதிரும்.

பல லட்சம் குடும்பங்கள் ஒன்றிணைந்து பாடும் கட்சிதான் திமுக. குடும்ப கட்சி என்று சொல்ல காரணம், பாசம் நிறைந்த கொள்கை உறவுகளாக உடன்பிறப்புகள் உள்ளனர். திமுக பேரியக்கத்தை எந்த சக்தியாலும் அசைக்க முடியாது. அரசியல் வாழ்வில் மகிழ்ச்சி தென்றலும், நெருக்கடி புயலும் மாறி மாறி வந்து போகும். அறிவாலயம் என்னும் பெயருக்கு ஏற்ப அதை அனுதினமும் தொழுதிடும் கோயிலாக தொண்டர்கள் நினைக்கின்றனர்.

எளியவர்களாக இருந்தாலும், கறுப்பு - சிவப்பு வேட்டி அணிவதில் கம்பீரத்தை வெளிப்படுத்துகிறார்கள். மாவட்ட வாரியாக நடக்கும் திமுகவினருடனான சந்திப்பு புதிய அனுபவமாக உள்ளது. திமுக வெற்றி பெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். ” என்றுள்ளார்.

இந்நிலையில் கமல் மதுரையில் ஸ்டாலின் பேச்சு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த கமல்; " நான் பூ அல்ல., விதை " என்னை முகர்ந்து பார்க்காதீர்கள், விதைத்து பாருங்கள், வளர்ந்து வருவேன் என அதிரடியாக பதில் கூறியுள்ளார்.

0 Responses to ‘நான் பூ அல்ல; விதை’; ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதிலடி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com