ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து செல்ல வேண்டும் என்பது தனது எதிர்பார்ப்பு என்று சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிச் சபைத் தேர்தல் முடிவுகளையடுத்து, தேசிய அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையைத் தொடர்ந்து சபாநாயகர் கரு ஜயசூரியவை அடுத்த பிரதமராக நியமிக்க வேண்டும் என வெளிவரும் கருத்து தொடர்பில் ஊடகவியலாளர்கள் அவரிடம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “பிரதமர் பதவியை நான் கேட்கவில்லை. தலைவர்கள் இருவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே எனது பிரார்த்தனை. சபாநாயகர் என்பதால் நடுநிலையாகவே செயல்படுகிறேன்.” என்றுள்ளார்.

0 Responses to மைத்திரியும் ரணிலும் இணைந்து செல்ல வேண்டும் என்பதே எனது எதிர்பார்ப்பு: கரு ஜயசூரிய