Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முல்லைத்தீவு மாவட்டம் பரந்தன் சாலை வட்டுவாகலில் அமைந்துள்ள கோத்தா கடற்படை முகாமிற்காக காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை நாளை வியாழக்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கெதிராக போராட மக்கள் அழைப்புவிடுத்துள்ளனர்.

முல்லைத்தீவுப் பகுதியில் வட்டுவாகல் கிராமத்தில் தமிழ்மக்களிற்கு சொந்தமான 469 ஏக்கர் நிலத்தினையும் ஏனைய நிலம் 148 ஏக்கருமாக மொத்தம் 617 ஏக்கர் நிலத்தில் பாரிய கடற்படைத் தளம் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த நில உரிமையாளர்களும் இப்பகுதியில் பரம்பரையாக மீன் பிடித்தல் தொழில்மூலம் வாழ்வாதாரத்தை கொண்டு நடாத்திய குடும்பங்களும் வாழ வழியின்றித் தவிக்கும் நிலையில் குறித்த முகாமை நிரந்தர கடற்படை தளமாக்க காணி சுவீகரிப்பிற்கான நிலஅளவீடு நாளை நடைபெறவுள்ளதாக நில அளவை திணைக்கள அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

எனினும் தமது நிலத்தை கடற்படை முகாமிற்காக கையகப்படுத்தும் நடவடிக்கையினை கண்டித்தும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் நாளை மீண்டும் நில அளவீட்டை தடுத்து போராட்டத்தை முன்னெடுக்கப்போவதாக மக்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவேதிருகோணமலை,சாலை,காங்கேசன்துறை ,காரைநகரென கடற்படை தளங்கள் அமைந்துள்ள நிலையில் கோத்தா கடற்படை தளம் தேவையில்லையென மக்கள் வாதிட்டுவருவதுடன் இப்பகுதியிலுள்ள அரச காணி கடற்றொழில் துறைசார் பல்கலைக்கழகமொன்றை அமைக்க விடுவிக்கப்படவேண்டுமெனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

ஏற்கனவே இரண்டு தடவைகளாக நில அளவை மேற்கொள்ள முன்னெடுக்கப்பட்ட முயற்சி மக்கள் போராட்டங்களினால் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

0 Responses to கோத்தா கடற்படை தளம் வேண்டாம்: மக்கள் போராட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com