Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருந்துக்கொண்டுதான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துகிறார்கள் என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் உள்ள நிலவரம் தொடர்பாக ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதம் நடைபெற்ற போது இந்தியாவிற்கான ஐ.நா. பிரதிநிதி சையத் அக்பரூதின் பேசுகையில், ஆப்கானிஸ்தானில் அமைதியை ஏற்படுத்த அந்நாட்டு அரசு பாராட்டத்தக்க நடவடிக்கையை முன்னெடுக்கும் நிலையில், அண்டையநாட்டில் (பாகிஸ்தான்) பாதுகாப்பாக இருந்துக்கொண்டு தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள். பாதுகாப்பான இடங்களில் இருந்துக்கொண்டு அப்பாவி மக்களை கொல்லும் தாக்குதலுக்கு திட்டமிடுகிறார்கள், முன்னெடுக்கிறார்கள் என்றார்.

வெளிப்படையாக பாகிஸ்தான் பெயரை குறிப்பிடாத அக்பரூதின், ஆப்கானிஸ்தானை இலக்காக்கும் பயங்கரவாதிகளுக்கு கிடைக்கும் ஆதரவை நிறுத்தவேண்டும் என்று வலியுறுத்தினார்.

“பயங்கரவாதத்திற்கு எதிராக சர்வதேச நாடுகள் நடவடிக்கைகளை முன்னெடுத்தாலும், தலிபான், ஹக்கானி நெட்வோர்க், அல்-கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ்., லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற பயங்கரவாதிகள் இயக்கங்களின் கருப்பு கொள்கைகளுக்கு இன்னும் ஆதரவை கொடுத்து வருகிறார்கள். அந்நாடு முல்லா உமர் மற்றும் ஒசாமா பின்லேடனுக்கு பாதுகாப்பு வழங்கியது. ஆப்கானிஸ்தான் பயங்கரவாத பிரச்சனை உள்ளூர் பிரச்சனைகளில் ஒன்று இல்லை என்பதை நாம் மறந்துவிட்டோம்,” எனவும் குறிப்பிட்டார். இந்தியா ஆப்கானிஸ்தானில் மேற்கொள்ளும் வளர்ச்சித்திட்டங்களையும் பட்டியிலிட்டுப் பேசினார்.

0 Responses to பாகிஸ்தானில் பாதுகாப்பாக இருந்து கொண்டுதான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துகிறார்கள்: இந்தியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com