Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ். பலாலி விமான நிலையத்தை இந்தியாவின் உதவியுடன், பிராந்திய விமான நிலையமாக அபிவிருத்தி செய்ய உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

இது தொடர்பாக, எதிர்வரும் ஜூலை 10ஆம் திகதி, களத்துக்கு நேரில் சென்று ஆராயவுள்ளதாக அவர் உறுதியளித்துள்ளார்.

அலரி மாளிகையில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற வடக்கு அபிவிருத்தி தொடர்பான சிறப்புக் கூட்டத்தில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்துவது மற்றும் அதற்குத் தேவையான காணிகள் தவிர்ந்த, ஏனைய காணிகளை விடுவிப்பது தொடர்பாக ஆராயப்பட்டது.

இந்த விடயத்தில் விரைவாக முடிவெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

இதையடுத்து, எதிர்வரும் ஜூலை 10ஆம் நாள் தாம் யாழ்ப்பாணம் வரும் போது, இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங்கும், அங்கு வருவார் என்றும், இருவரும் இணைந்து பலாலி விமான நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அதனை அபிவிருத்தி செய்வது குறித்த திட்டங்களை இறுதி செய்வதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

0 Responses to பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக தரமுயர்த்த நடவடிக்கை; பிரதமர் உறுதி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com