Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற நான்கு ஆண்டுகளில் 52 நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக, ரூ.355 கோடி செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு எவ்வளவு செலவிடப்பட்டது என்பது பற்றிய தகவல்களை தர வேண்டும் என்று பீமப்பா என்பவர் பிரதமர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்தார்.

இதற்குப் பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், 4 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி 41 முறை வெளிநாட்டுப் பயணம் செய்து, 52 நாடுகளுக்குச் சென்றுவந்ததாகத் தெரிவித்துள்ளது. இந்தப் பயணங்களுக்காக ரூ.355 கோடி செலவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இந்தத் தகவல்கள் தனக்கு அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ள பீமப்பா கடாட், இதுபோல் பிரதமரின் உள்நாட்டுப் பயணத்துக்கான செலவு விவரங்களையும் தான் கேட்டிருந்ததாகவும் அதைத் தரப் பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மோடியின் 5 பயணங்களுக்கான செலவு இதில் சேர்க்கப்படவில்லை. இந்தியா விமான படைக்கு சொந்தமான விமானங்களில் அவர் பயணம் செய்ததால், அந்த செலவு சேர்க்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிரதமர் மோடியின் பாதுகாப்புக்கு எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்ற விபரமும் வெளியிடப்படவில்லை.

0 Responses to பதவியேற்ற 4 ஆண்டுகளில் மோடி, 52 நாடுகளுக்கு பயணம்; ரூ. 355 கோடி செலவு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com