Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பாராளுமன்றம் மற்றும் மாநில சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து, வரும் 07ஆம் தேதி முதல் அரசியல்கட்சிகளுடன் சட்ட ஆணையம் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது.

பாராளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதால் அதிக பண செலவு குறைக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி யோசனை கூறியிருந்தார். இதற்கு பல்வேறு தரப்பில் வரவேற்பும் ஆதரவும் இருந்தது.

இது குறித்த அறிக்கை தயாரிக்கும் பணியில், சட்ட அமைச்சக அதிகாரிகள் தீவிரமாக பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து கருத்தொற்றுமையை உருவாக்க அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்த சட்ட ஆணையம் திட்டமிட்டுள்ளது.

இதன்படி டில்லியில் வரும் 07, 08 ஆகிய இரு தேதிகளில் ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளதாகவும், இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 59 மாநில கட்சிகளுக்கு சட்ட ஆணையம் கடிதம் எழுதி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது பற்றி அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்டு முன்பு ஒருமுறை சட்ட ஆணையம் கடிதம் எழுதியது. ஆனால், எந்த அரசியல் கட்சியும் அதற்கு பதில் அளிக்கவில்லை. இந்த சூழ்நிலையில், மீண்டும் ஆலோசனை கூட்டத்துக்கு சட்ட ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

0 Responses to பாராளுமன்றம், சட்ட சபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல்; சட்ட ஆணையகம் ஆலோசனை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com