வதந்திகள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக மத்திய அரசிடம் வாட்ஸ் அப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.
வதந்திகள் பரப்பப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு வாட்ஸ் அப், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. தவறான தகவல்கள், வதந்திகளை தடுப்பது சவாலான பணியாக இருக்கிறது என்று வாட்ஸ் அப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
வதந்திகளை தடுக்க அரசு, சமூகம், தொழில்நுட்ப நிறுவனங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
பசு வதை மற்றும் குழந்தை கடத்தல் தொடர்பாக, வாட்ஸ் அப் மூலம் அண்மைக் காலத்தில் பரவிய வதந்திகளால் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களால் 20க்கும் மேற்பட்டோர் அடித்துக் கொல்லப்பட்ட நிகழ்வுகள் நடந்தன. இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்குமாறு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த நிலையில், வாட்ஸ் அப் நிர்வாகமான ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தலை அனுப்பியது. வதந்திகள் பரப்பப்படுவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
கொலைகள் நடைபெறக் காரணமாகும் வதந்திகள் பரவுவதைத் தடுப்பதில் தங்களுக்கான பொறுப்பு மற்றும் கடமையை வாட்ஸ் அப் நிர்வாகம் தட்டிக்கழிக்க முடியாது என்று தொலைத் தொடர்பு மற்றும் மின்னணுவியல் துறை அமைச்சகம் அனுப்பிய குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, போலி தகவல்கள், வதந்திகளைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக வாட்ஸ் அப் நிர்வாகம் உறுதியும் அளித்துள்ளது. வாட்ஸ் அப்பில் வரும் தவறான தகவல் மூலம் பலர் கொல்லப்பட்டிருப்பது மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்றும் மத்திய அரசுக்கு அனுப்பிய கடித்தில் வாட்ஸ் அப் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

0 Responses to வதந்திகள் பரவாமல் தடுக்க நடவடிக்கை; மத்திய அரசிடம் வாட்ஸ் அப் உறுதி!