Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

“வடக்கு மாகாணத்தில் இருந்து இராணுவ முகாம்கள் அகற்றப்படமாட்டாது என்று பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன கூறிய கருத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது.” என்று வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று திங்கட்கிழமை ஊடகவியலாளர்களிடம் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “நாங்கள் அனைத்து இராணுவத்தினரையும் வெளியேறுமாறு கூறவில்லை. மக்களுடைய காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதுவே தற்போதுள்ள பிரச்சினை.

பாதுகாப்புகளைக் காரணங்காட்டி, தொடர்ந்து பொதுமக்களின் காணிகளை அபகரித்து வைத்திருப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாது. அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் செயற்பாடு சரியோ, பிழையோ ஆனால், அவர்கள்தான் மக்களுடைய பிரதிநிதிகள்.” என்றுள்ளார்.

0 Responses to இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என்கிற பாதுகாப்புச் செயலாளரின் கருத்தை ஏற்க முடியாது: சி.வி.கே.சிவஞானம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com