“கத்தியின்றி, இரத்தமின்றி தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக முன்னெடுக்கப்படும் போராட்டம் நிச்சயம் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்க்கும்” என்று தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பளையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சி.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ““தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் மாற்றங்களின் பின்னணியில் தென்படக்கூடிய தமிழ் மக்களின் எதிர்கால நெருக்கடிகளை புரிந்து அதற்கு ஏற்றவாறு காய்களை நகர்த்த வேண்டியது காலத்தின் கட்டாயம். அரசாங்கத்தின் கெடுபிடிகளால் வடக்கையும், கிழக்கையும் இழக்க வேண்டி ஏற்படுமோ என்ற அச்சம் மேலோங்கியுள்ளது. இதைப் பற்றி சிந்தித்து செயலாற்றக் கூடிய காலம் தற்போது உதயமாகியுள்ளது. ஆகவே, அரசியல் முன்னெடுப்புகளுக்கு சமாந்தரமாக இளைஞர்களை இணைத்து அவர்களுடாக பல்வேறு வேலைத் திட்டங்களை முன்னெடுக்க வேண்டிய அவசரமும், அவசியமும் ஏற்பட்டுள்ளது.” என்றுள்ளார்.

0 Responses to துணிச்சலான போராட்டம் அரசின் கவனத்தை ஈர்க்கும்: சி.வி.வி