நேற்று முன் தினம் இந்திய மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்ட இந்தியக் குடியுரிமை திருத்த மசோதா, இன்று மாநிலங்கள் அவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த மசோதாவை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்நிலையில் இச் சட்டத்திருத்தம் குறித்துப் பலரும் பல்வேறு கருத்துக்க்ளைத் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக மக்களவையில், குடியுரிமை மசோதாவை ஆதரித்த சிவசேனா இந்த மசோதாவில் சில திருத்தங்கள் செய்யாவிட்டால் மாநிலங்களவையில் ஆதரவு அளிக்க மாட்டோம் என அறிவித்துள்ளது. இது தொடர்பில், சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், செய்தியாளர்களிடம் பேசுகையில், "இந்த மசோதா மீதாக எமக்குச் சில சந்தேகங்க உள்ளன. அவை குறித்து திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால், மக்களவையில் நாம் ஆதரவு தெரிவித்த இந்த மசோதாவை மாநிலங்கள் அவையில் நிராகரிப்போம் எனக் குறிப்பிட்டார்.
நாட்டின் முக்கியமான ஒரு விவகாரத்தில் வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடக்கூடாது. இந்த நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையிலான பிரிவினையை மீண்டும் உருவாக்கும் வகையில் செயற்படக் கூடாது. அதே போல் இந்தச் சட்டதிருத்தம் கண்டுகொள்ளாத மற்றுமொரு மக்கள் சமூகமாக, இந்தியாவில் வதியும், இலங்கை தமிழ், இந்து அகதிகள் உள்ளார்கள். அவர்கள் மீதான கவனம் கொள்ளபட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளதாக அறிய வருகிறது.
இது இவ்வாறிருக்க வாழும் கலைஅமைப்பின் நிறுவனர் ஶ்ரீஶ்ரீ ரவிசங்கர் குரு அவர்களும், ஈழத்தமிழ் அகதிகளும் இந்தியக் குடியுரிமை பெற வகைசெய்யபட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் பெற்றிருக்கும் ஈழத் தமிழ் மக்கள் சுமார் ஒரு இலட்சம் பெர் வரையில் எதுவித உரிமைகளுமற்ற மக்களாக இந்தியாவில் வாழ்ந்தவருகின்றார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இந்தியக் குடியுரிமை ஈழத் தமிழ் இந்து அகதிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் - சிவசேனா