தெலுங்கானாவில் பெண் கால்நடை மருத்துவரை பலாத்காரம் செய்து எரித்து கொன்றதாக குற்றஞ்சாட்டப்படும் நான்கு சந்தேக நபர்களையும் போலீசார் சுட்டுக்கொலை செய்துள்ளனர். போலீஸ் பிடியில் இருந்து நால்வரும் தப்பி செல்ல முயன்ற போது, இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நவ.,27இல், தெலுங்கானாவில் பணி பணி முடிந்து இரவு வீடு திரும்பிய பெண் மருத்துவரை, உதவி செய்வது போல் கடத்திச் சென்று லாரி டிரைவர்கள் 4 பேர் பலாத்காரம் செய்தனர். அப்பெண்ணின் வாயில் கட்டாயப்படுத்தி விஸ்கியை ஊற்றி, அவரை மயக்கமடையச் செய்து, பலாத்காரம் செய்து, பின் கழுத்தை நெறித்து கொலை செய்து , உடலை எரித்தனர். இந்த கொடூரத்தில் ஈடுபட்ட லாரி டிரைவர்கள், கிளீனர்கள் என கேசவலு, முகமது பாஷா, நவீன், சிவா ஆகியோரை போலீசார், கடந்த நவ.,29இல் கைது செய்து விசாரித்து வந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டம் வலுத்தது. பார்லிமென்டிலும் இந்த சம்பவம் எதிரொலித்தது. குற்றவாளிகள் 4 பேரையும் 7 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றவாளிகளை, சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். பெண் மருத்துவரை எரித்து கொன்ற, தேசிய நெடுஞ்சாலை 44இல் பாலத்தின் அடியில், குற்றவாளிகளை போலீசார் கொண்டு சென்றனர். அங்கு, குற்றம் எப்படி நடந்தது என நடித்து காட்டுமாறு போலீசார், அவர்களிடம் கூறியுள்ளனர். ஆனால், 4 பேரும் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனையடுத்து, குற்றவாளிகள் 4 பேரையும் போலீசார் சுட்டு கொன்றனர். சம்பவ இடத்தில் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

0 Responses to தெலுங்கானாவில் பெண் மருத்துவர் கொலையுடன் சம்பந்தப்பட்ட நால்வர் சுட்டுக்கொலை!