Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

குறிப்பு – இலங்கை எம்.பி யோகேஸ்வரன் சில மாதங்களாக மூளையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளார், இவரை அவரது குடும்பத்தினர் தெல்லிப்பளை செல்லுமாறு வலியுறுத்தியபோதும் அவர் அங்கு செல்லாது இந்தியா சென்று என்னென்னமோ கருத்து தெரிவித்து வருகிறார்.

இதனால் இவருடைய கருத்துக்களை இந்திய மற்றும் தமிழ் மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் ஒரு பொழுதுபோக்காக மட்டும் எடுத்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றது.

செய்தி – தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்தும், ஈழப் பிரச்சனை குறித்தும் சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், சீமான் போன்றவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின், பிரச்சினைகள் தீர்ந்த பின் ஈழப்பிரச்சினை குறித்து பேசுவது வேடிக்கையானது எனத் தெரிவித்தார்.

அத்துடன் தமிழ் தேசிய கூட்டமைப்பை விமர்சிக்க, திருமுருகன் காந்திக்கு என்ன அருகதை உள்ளது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகள் தாங்கள் செய்கின்ற செயலை ஒப்புக் கொள்ளும் கொள்கை உடையவர்கள் எனத் தெரிவித்த அவர், ராஜீவ்காந்தியை கொலை செய்ததாக ஒருபோதும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக சில அரசியல் தலைவர்கள் தெரிவிக்கும் கருத்து இலங்கை வாழ் தமிழ் மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 Responses to சீமான் தேவையில்லாமல் பேசுவதை நிறுத்த வேண்டும்: யோகேஸ்வரன் சொல்கிறார்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com