Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கை முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன்,

தமிழ் சமுதாயத்தையே வேறோடு அழிக்க ராஜபக்சே அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு இந்தியாவின் மத்திய அரசு மனசாட்சி இல்லாமல் துணை போகிறது.

இலங்கை முகாம்களில் அடைக்கப்பட்டிருக்கும் தமிழ்ப் பெண்களின் கற்பப் பைகள் எடுக்கப்படுகிறது. ஆண்களின் ஆண்மை சக்திகள் அழிக்கப்படுகிறது.

நன்றி: நக்கீரன்

தமிழ் சமுதாயம் அழிக்கப்படுவதற்கு இந்தியாவே முக்கிய காரணமாக இருக்கிறது. அமெரிக்க அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டண் ஆகியோருக்கு இருக்கும் மனிதாபிமானம் கூட இந்தியாவுக்கு இல்லை என்பதுதான் பெரும் வேதனையாக உள்ளது.

3 லட்சம் தமிழர்கள் மின்சார வேலிக்குள் அடைக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கு மருத்துவ வசதி இல்லை. உணவு சரியாக கிடைப்பதில்லை.

முகாம்களில் தமிழ் மருத்துவர்களும் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ் மருத்துவர்களிடம் கூட மருத்துவம் பார்க்க அனுமதிக்க மறுக்கின்றனர்.

பத்திரிகையாளர்களுக்கு தொடர்ந்து அனுமதி மறுக்கப்படுகிறது. காரணம் முகாம்களில் நடக்கும் அநீதிகளை வெளி உலகத்துக்கு காட்டி விடுவார்கள் என்பதால்தான்.

உண்மைகளை உலகத்துக்கு உணர்த்திய பத்திரிகையாளர்களுக்கு 20 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்படுவது மிகவும் கொடுமையானது.

மீண்டும் ஈழப்பிரச்சனைக்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்திக்கொண்டிருக்கும் என்றார்.

0 Responses to முகாம்களில் தமிழ்ப் பெண்களின் கற்பப் பையை அகற்றுகிறார்கள்: தா.பாண்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com