Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

78 தமிழர்களை வெளியேற்றும் இந்தோனேசியா?

பதிந்தவர்: தம்பியன் 30 October 2009

ஆஸ்திரேலியாவால் திருப்பி அனுப்பப்பட்ட 78 இலங்கைத் தமிழர்களையும் தனது கடல் பகுதியிலிருந்து திருப்பி அனுப்பி விட இந்தோனேசியா முடிவெடுத்துள்ளது. இதனால் அவர்களின் நிலை பெரும் கவலைக்கிடமாகியுள்ளது.

கடந்த 11 நாட்களாக கப்பலில் தவித்துக் கொண்டிருக்கின்றனர் இந்த அப்பாவித் தமிழர்கள். சுமத்ரா தீவுக்கு அருகே அவர்கள் கப்பலில் உள்ளனர். கப்பலை விட்டு இறங்க அவர்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றனர்.

இதையடுத்து அடையாள பரிசோதனைக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். அல்லது வெளியேறப்பட நேரிடும் என இந்தோனேசியா எச்சரித்துள்ளது.

11 நாட்களுக்கு முன்பு இவர்கள் ஆஸ்திரேலியாவுககுள் நுழைய முயன்றபோது ஆஸ்திரேலிய சுங்கத்துறை தடுத்து நிறுத்தியது. பின்னர் அவர்களை இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பியது.

ஆனால் கப்பலை விட்டு தமிழர்கள் இறங்க மறுத்து வருகின்றனர்.

இதையடுத்து இந்தோனேசிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெகு பைசாஷ்யா கூறுகையில், 78 தமிழர்களையும் அடையாளம் காண முயற்சிக்கிறோம். அதற்கு அவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

ஆனால் அதற்கு அவர்கள் மறுக்கிறார்கள். இந்த நிலை நீடித்தால் அவர்களை இந்தோனேசியா கடல் பகுதியை விட்டு வெளியேற்ற நேரிடும் என்றார்.

இதனால் 78 தமிழர்களின் நிலையும் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது.

0 Responses to 78 தமிழர்களை வெளியேற்றும் இந்தோனேசியா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com