Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக 28.10.2009 புதன் கிழமை 15.00மணிக்கு கவனயீர்ப்பு போராட்டம் நடைபெற்றது.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை மதித்து அவர்களுக்கான சுதந்திரத்தையும், விடுதலையையும் வலியுறுத்தியும், சிறிலங்காப்பேரினவாத அரசின் மிகக்கொடுமையான வதைமுகாம்களிலுள்ள மக்களை விடுதலை செய்து அவர்களின் பூர்வீக மண்ணில் உடனடியாக குடியமர்த்தக்கோரியும், சிறிலங்கா அரசின் மனிதவுரிமை மீறல்களை நிறுத்த சர்வதேச சமுதாயத்திடம் வலியுறுத்தியும் பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாடடில் கவனயீர்ப்புபோராட்டம் நடைபெற்றது.

பிரான்சில் ஒவ்வொரு புதன் கிழமையும் கவனயீர்ப்புப்போராட்டம் நடைபெற்று வருகிறது எனவே தொடர்ச்சியான போராட்டங்களில் மக்களை பங்கெடுக்குமாறு பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது.

0 Responses to பிரான்சு நாடாளுமன்றம் முன்பாக 8வது வாரமாக நடைபெற்ற கவனயீர்ப்பு போராட்டம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com