Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரிப்பதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசோதி அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிடம் தான் முறைப்பாட்டுக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

முறைப்பாட்டை அடுத்து சிறீலங்கா அதிபரின் செயலக உதவிச் செயலாளர் அன்ரன் பெரேரா, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிகளிடம் இது தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு கோரியதுடன், அரியநேத்திரனின் முறைப்பாட்டுக் கடிதத்தின் பிரதிகளை அரசாங்க அதிபர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

0 Responses to தமிழர்களின் காணிகளை சிங்களவர்கள் அபகரிப்பதாக மகிந்தவிடம் அரியநேத்திரன் முறைப்பாடு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com