Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனா அரசாங்கத்தின் இரண்டாயிரத்தி நாற்பத்தி ஒன்பது மில்லியன் ரூபா பெறுமதியான இயந்திரங்கள் சிறீலங்கா அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டள்ளன.

வடக்கில் தமிழ் மக்களின் இடங்களை புனரமைப்பதற்காக சீனா 257 இயந்திரங்களை சிறீலங்காவிற்கு வழங்கியுள்ளது. சீனாவின் சிறீலங்கா மீதான ஆதிக்கம் செலுத்துமுகமாக சிறீலங்காவிற்கு நீண்டகால கடன் அடிப்படையில் இவ்வியந்திரங்கள் காலிதுறைமுகத்தில் வைத்து வழங்கப்பட்டுள்ளது.

இவை வடமாகாணஆளுனர் சந்திரசிறியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடக்கில் உள்ள தமிழ் மக்களின் வாழ்விடங்களில் வீதிகள் மற்றும் குளங்கள் புனரமைத்தல் மற்றும் நீர்வழங்கள் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக சீனா இவ்வியந்திரங்களை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to சீனா - சிறீலங்காவுக்கு நீண்டகால கடன் அடிப்படையில் இயந்திரங்களை வழங்கியுள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com