Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா மீது சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்களுக்கு உறுதிமொழிகளை வழங்குவததை விடுத்து செயல் ரீதியான நடவடிக்கைகளை எதிர்ப்பார்ப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின், தெற்காசிய உறவுகள் பிரதிநிதிகளின் தலைவர் ஜீன் லம்பெர்ட் தெரிவிக்கையில்:

மனித உரிமை மீறல் மற்றும் ஊடக அடக்குமுறை போன்ற சம்பவங்கள் தொடர்பில் சிறீலங்கா காத்திரமான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் நிறைவேற்றிய தீர்மானங்கள், இலங்கை தொடர்பில் அதீத கண்டனத்தை சந்தேகம் இன்றி தெளிவுப்படுத்தியுள்ளது.

ஜீ எஸ் பி பிளஸ் வரிச்சலுகை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கல்கள் குறித்து, அவதானித்ததன் பின்னர் ஐரோப்பிய ஆணையகத்தினால் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதனை வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

0 Responses to உறுதிமொழிகளை விட செயல்வடிவத்தையே வலியுறுத்துகிறோம் - ஐரோப்பிய ஒன்றியம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com