Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியாவைச் சூழவுள்ள பகுதிகளில் வர்த்தகர்களிடமும் , ஏனையோரிடமும் கப்பம் பெற்றனர் எனக் கூறப்படும் 6 சந்தேக நபர்களை

வவுனியா மாவட்டக் குற்றத்தடுப்புப் பிரிவினர் கைதுசெய்துள் ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. அப்பிரதேசத்தில் இடம்பெற்ற வழிப்பறிக் கொள்ளை, இரட்டைக் கொலை, மற்றுமொரு கொலை உள்ளிட்ட பல் வேறு சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புபட்டுள்ளனர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2006ஆம் ஆண்டு தொடக்கம் இடம்பெற்றன எனக் கூறப்படும் பல்வேறு குற்றச்சம்பவங்கள் தொடர்பாகவும் கப்பம் பெற்ற 60 சம்பவங்கள் தொடர்பாகவும் பொலிஸாருக்கு இவர்கள் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன எனவும் வவுனியா பிரதிப் பொலிஸ் மா அதிபரின் தலைமையில் செயற்படும் மாவட்டக் குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட இச்சந்தேக நபர்கள் தற்போது தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

0 Responses to கப்பம் வசூலித்த ஆறு பேர் வவுனியாவில் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com