பம்பலப்பிட்டியில் நீரில் மூழ்கடிக்கப்பட்ட தமிழ் இளைஞரின் மரணம் குறித்த விசாரணைகளை நடுநிலைமையோடு விசாரிக்க வேண்டும் என கொழும்பு மாவட்ட அங்கிலிக்கன் ஆயர் வணக்கத்துக்குரிய டுலிப் சிக்கேரா கோரிக்கை விடுத்துள்ளார்.
மனநோயாளியான ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும் வேறு சிலரும் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டவர்களைக் உடன் கைது செய்யப்படுவது உறுதி செய்யப்பட வேண்டும்.
எந்தகைய சந்தர்ப்பங்களிலும் சட்டத்தைக் காக்கின்ற காவல்துறையினரின் பொறுப்புக்கள் உணரப்படவேண்டும். இவ்வாறான குற்றங்களை எவ்வாறு தடுப்பது? இவ்வாறான சந்தர்பங்களில் காவல்துறையினர் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என போதிக்கப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ் இளைஞனின் மரணம் குறித்து நடுநிலைமையான விசாரணை அவசியம் - ஆயர் டுலிப் சிக்கேரா
பதிந்தவர்:
தம்பியன்
31 October 2009



0 Responses to தமிழ் இளைஞனின் மரணம் குறித்து நடுநிலைமையான விசாரணை அவசியம் - ஆயர் டுலிப் சிக்கேரா