Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அதிபர் தேர்தலில் நிறுத்தப்படும் பொது வேட்பாளர் நியமம் குறித்த முடிவு இன்றும் ஒரு வார காலத்தில் தீர்மானம் எடுக்கப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா அதிபர் தேர்தலில் நிறுவத்துவதற்காக பல்வேறு தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருகின்றன. தேர்தலில் வெற்றியீட்டக் கூடிய சிறந்த வேட்பாளர் ஒருவரை நியமிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ஜெனரல் சரத் பொன்சேகா, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஆகியோரை ஜனாதிபதி வேட்பாளராக நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

யுத்த வெற்றியின் கதாநாயகன் ஜெனரல் சரத் பொன்சேகா பற்றியே அனைவரும் பேசுகின்றனர். அவருக்கு பலத்த மக்கள் ஆதரவு காணப்படுகின்றது. பயங்கரவாதத்திற்கு எதிரான வெற்றியின் நயகனாகவே சரத் பொன்சேகாவை மக்கள் நோக்குவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to அரச அதிபர் தேர்தலின் பொது வேட்பாளர் குறித்து ஒருவாரத்தினுள் தீர்மானிக்கப்படும் - எஸ்.பி திஸாநாயக்க

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com