Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர்களின் பூர்வீக நிலப் பிரதேசங்களை பெரும்பாண்மை இனத்தவர்கள் சட்ட விரோதமாக அபகரிக்கின்றனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற சபை ஒத்திவைப்பு பிரரேணை விவாத உரையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

தமிழர் தாயகத்தின் திருகோணமலை உட்பட கிழக்குப் பகுதிகளில் சிறுபாண்மையினரின் காணிகளையும், அரசுக்குச் சொந்தமான காணிகளையும் பெரும்பாண்மையினர் சட்டவிரோதமான முறையில் அரசாங்கத்தில் உள்ளவர்களின் உதவியுடன் அபகரித்து வருகின்றனர்.

சட்டவிரோதக் குடியேற்றம் உடனடியாக அரசாங்கத்தினால் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இல்லையேல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்க்க முடியாத சில முடிவுகளை எடுக்கவேண்டி வரும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத குடியேற்றக்காரர்களுக்கு எதிராக அரசாங்கம் இதுவரை எந்தவித சட்ட நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. அதனைத் தடுக்கவும் நிறு்த்தவும் அரசாங்கத்தினால் முடியவில்லை.

சட்டவிரோத குடியேற்றம் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெறுகின்றது. மொறவௌ முதலிக்குளம் பிரதேச செயலகப் பிரிவில் வேப்பங்குளம் மற்றும் முதலியார்குளம் ஆகிய கிராமங்களுக்கிடையில் பன்குளம் வரையில் திருகோணமலை ஹொரவபொத்தானை வீதியின் இரு மருங்கிலும், சேருவில பிரதேச செயலகப் பிரிவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சேருவில பொலனறுவை வீதியின் இரு மருங்கிலும், தம்பலகாமம் மற்றும் கந்தளாய் பிரதேச செயலகப் பிரிவுகளில் மாவட்ட எல்லை வரை திருகோணமலை ஹபரண வீதியில் பல பிரதேங்களில் குச்சவெளி பிரதேச செயலகப் பிரிவில் இறக்கக்கண்டி மற்றும் கும்புறுப்பிட்டி கிராமங்களில் கடற்றையை நோக்கி உள்ள பெறுமதிவாய்ந்த காணிகளில் குடியேற்றங்கள் நடைபெறுகின்றன.

திருகோணமலை நகரம் மற்றும் கிரேவெட் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட விளாங்குளம். குச்சிவெளி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள இறக்கக்கண்டி. தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பாலம்போட்டை மற்றும் பத்தினிபுரம் ஆகிய பகுதிகளும் திட்டமிட்ட குடியேற்றத்துக்கு உட்படுத்தப்படுகின்றன.

சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு, நவரத்னபுரம், சூடைக்குடா, கடற்கரைச்சேனை மற்றும் சம்பூர்க்களி கிராமசேவையாளர் பிரிவுகளில் பாடசாலைகளும், இந்துக்கோவில்களும் ஏனைய கட்டிடங்களும் இருந்தன. இப்பிரதேசத்திலிருந்த சகல கட்டிடங்களும் அழிக்கப்பட்டு விட்டன என அவர் அங்கு மேலும் உரையாற்றியுள்ளார்.

0 Responses to திருகோணமலையில் தமிழரின் பூர்வீக நிலப்பிரதேசங்கள் சிங்களவர்களால் அபகரிப்பு - இரா.சம்பந்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com