Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காவில் சீனா கால்லூன்றிவிட்டதாக இந்தியா கொடுத்த மறைமுக அழுத்தத்திற்கு சிறீலங்கா கருத்து வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக சிறீலங்கா வெளிவிவகார அமைச்சர் றோகிதபோகல்லாகம கருத்து வெளியிட்டுள்ளார். சீனாவுடன் சிறீலங்காவிற்கு நெருக்கமான உறவுகள் இருந்த போதும் சீனாவுடன் பாதுகாப்பு தொடர்பான உறவாடல்கள் எதனையும் செய்து கொள்ளவில்லை என்றும் இந்தியாவினை சிறீலங்கா நெருங்கிய நண்பனாக காண்பதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் சீனா கடற்படைத் தளம் எதனையும் அமைத்துகொள்ள கோரவில்லை சீனா சிறீலங்காவின் பொருளாதார நிகழ்ச்சி நிரலுக்கு ஆதரவளித்தமையாலும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சிறீலங்காவிற்கு ஆதரவு வழங்கியமையுமே தவிர வேறு சிறப்பான உறுவு சீனாவிற்கும் சிறீலங்காவிற்கும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சிறீலங்கா சீனாவுடன் பாதுகாப்பு தொடர்பான உறவினை கொண்டிருப்பதாக இந்தியாவிற்கு எழுந்துள்ள கேள்வியினாலேயே சிறீலங்கா அரசினால் இக்கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

0 Responses to சீனாவின் ஆதிக்கம் தொடர்பாக சிறீலங்கா கருத்து வெளியிட்டுள்ளது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com