Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்காப் படையில் உள்ள படை அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது என சிறீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தனது அறிக்கையில் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:

சிறீலங்காப் படையில் உள்ள படை அதிகாரிகள் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன் படை அதிகாரிகளின் பெயர்களைக் கூறிப் பரப்புரை மேற்கொள்ளப்படுவது தண்டனைக்கு உரிய குற்றம்.

அரசியல் ஈடுபாடு கொண்ட சில தனி நபர்கள் அச்சு ஊடகங்களிலும் இணையத்தளங்களிலும் படை அதிகாரிகளின் பெயர்களைக் குறிப்பிட்டு ஆதாரமற்ற செய்திகளை வெளியிட்டு வருவது அவதானிக்கப்பட்டு வருகின்றது.

இராணுவ அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்துவது குற்றமாகக் கருதப்பட்டு சம்பந்தப்பட்டோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று இராணுவ அதிகாரிகளும் அரசியலில் ஈடுபடுவது முற்றாகத் தடுக்கப்பட்டுள்ளதாகவும்

0 Responses to சிறீலங்காப் படை அதிகாரிகள் அரசியலில் ஈடுபடத் தடை - இராணுவப் பேச்சாளர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com