அமெரிக்க அரச நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு வந்த அழைப்பையடுத்து பயமற்ற சாகசமான பயணத்தை மேற்கொண்ட கூட்டுப்படைத் தலைமையதிகாரி ஜெனெரல் சரத் பொன்சேகா, அமெரிக்காவை அடைந்ததும் அதன் ராஜாங்க திணைக்கள அறிக்கையில் போர்க்குற்ற மீறல்கள் புரிந்தார் என குற்றம் சாட்டப்பட்டார். இது அமெரிக்க தாய்நாட்டு பாதுகாப்பு திணைக்களத்துடன் (DHS) சரத்துக்கு சட்டரீதியாக ஒரு கிடுக்கிப்பிடி போட்டுள்ளது போல உள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிகை கருத்தெழுதியுள்ளது.
சரத் பொன்சேகாவுடன் ஒரு தன்னிச்சைல்லாத கூட்டத்துக்கு DHS அழைத்துள்ளபோதும், சரத்தின் சட்ட ஆலோசகர்கள் இந்த கூட்டம் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. இந்தக் கூட்டத்தில், சரத் பொன்சேகா மீது குற்றம் சாட்டும் அதிகாரம் அமெரிக்காவுக்கு இருந்தால் அக்குற்றங்களிலிருந்து சரத்தைக் காப்பாற்ற வேண்டும் எனில் குற்றமற்றவர் என நிரூபிக்கும்படி சரத் கேட்கப்படலாம் அல்லது சரத் தன்னைக் காக்கும்பொருட்டு அவற்றை நிரூபிக்க மாட்டேன் என மறுத்துவிட்டு இலங்கைக்கு திரும்ப நேரிடலாம் என அவர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.
"எவ்வாறெனினும் மேற்படி இரு சந்தர்ப்பங்களும், அமெரிக்காவில் சரத்தின் சட்டரீதியான எதிர்காலத்துக்கு நல்ல சூட்சுமமல்ல. சரத் பொன்சேகா தன்னைக் காத்துக் கொள்ளும் தன்மையை இழந்துவிட்டால், அவருக்கு எதிராக அமெரிக்க குற்ற சாசானங்கள் மீது தனிப்பட்ட வாதிகளால் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட ஆயத்தமாக உள்ளன. தன்னைக் காத்துக் கொள்ளும் வழி உள்ளது என சரத் கண்டுபிடித்தால், பின்னர் அவர் தனது இலங்கை ராணுவ பதவியை கைவிடும்போது, அமெரிக்காவில் சட்ட நடவடிக்கைகளுக்கு தாமாகவே முகம் கொடுப்பார்" என கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்து தற்போது செய்மதி சான்றுகள் மூலம் யுத்த குற்றங்களுக்கான சான்றுகளைச் சேகரித்து வரும் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் சார்பில் ஒரு அதிகாரி தமிழ்நெட்டுக்குக் கூறியுள்ளார்.
மேலும் சரத் பொன்சேகா இந்த தடவை அமெரிக்காவுக்கு விஜயம் செய்திருப்பது அவருக்கு கிடைத்துள்ள கிரீன் கார்டு காலாவதியாவதைத் தவிர்ப்பதற்கே என பல அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளன.



0 Responses to அமெரிக்க சட்டம் பொன்சேகாவுக்குச் சுருக்குப் பிடி போடுகிறது