Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னியில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பான தகவல்களைத் திரட்டி உளவுப் பணியில் ஈடுபட்டதாக சில சர்வதேச அரசசார் பற்ற நிறுவன ஊழியர்கள் நாடு கடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் செயற்பட்ட அவர்களை நாடு கடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக "திவயின" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அவர்கள் மீண்டும் இலங்கைக்கு பிரவேசிக்க முடியாத வகையில் தடையுத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் என்ற போர்வையில் இலங்கைக்கு விஜயம் செய்த சிலர் செய்மதி தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் அவர்கள் உளவுப் பணியில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெருந் தொகைப் பணத்தைச் செலவழித்து செய்மதிகளின் ஊடாக வன்னி யுத்த நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை குறித்த அரச சார்பற்ற நிறுவன ஊழியர்கள் திரட்டியுள்ளனர். யுத்தம் தொடர்பான தகவல்களை அமெரிக்காவிற்கு வழங்கியவர்கள் குறித்த நபர்களே என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது எனவும் "திவயின" செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to வன்னிப் போரில் உளவு பார்த்த தொண்டு நிறுவனப் பணியாளர்களை நாடுகடத்த அரசாங்கம் முடிவு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com