Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்காக கனடியத் தமிழ் மக்களிடையே, நேற்று (19-12-2009) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை நடத்தப்பட்ட வாக்குக்கணிப்பு மொத்தமாக 48,583 வாக்காளர்கள் வரலாறாகி தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். அதில் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கு ஆதரவாகஆம்என்று 48,481 வாக்குகளும்.......

.....எதிராகஇல்லைஎன்று 85 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அத்துடன் 17 வாக்குகள் செல்லுபடியற்றவையாக தேர்தல் நிறுவனத்தினால் நிராகரிக்கப்பட்டன.

இதன்பிரகாரம் 99.82 வீதமான மக்களால் வட்டுக்கோட்டைத் தீர்மானம்ஆம்என்று வாக்களிக்கப்பட்டதால் வாக்களிப்பில்ஆம்வெற்றி பெற்றதாக தேர்தல் நிறுவனத்தினால் உத்தியோகபூர்வ முடிவாக அறிவிக்கப்பட்டது.

தேர்தலை நடத்திய ES&S என்ற நிறுவனம் 40 ஆண்டுகளாக சனாதிபதித் தேர்தல் முதற்கொண்டு பல்வேறு தேர்தல்களை நடத்தி பெயர்பெற்ற வட அமெரிக்க தேர்தல் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

நேர்த்தியான தொழிநுட்பத்துடன் கூடிய இலத்திரனியல் வாக்களிப்பு இயந்திரங்கள் மூலம் நடத்தப்பட்ட தேர்தலாகையால், தேர்தல் முடிந்த சில நிமிட நேரங்களிலேயே முடிவுகள் வெளிவர ஆரம்பித்தன.

கனடாவில் எந்த ஒரு சமூகமும் முனையாத முன்முயற்சியாக சனநாயக ரீதியாக அமைந்த இவ்வாக்குக்கணிப்பை கனடிய தேசிய ஊடகங்கள் பலவும் முதன்மையாகவும் தொடர்ச்சியாகவும் ஒலி-ஒளி பரப்பியமை முக்கிய விடயமாகக் நோக்கத்தக்கது.

தொகுதிவாரியான தேர்தல் பற்றிய முழு விபரம் பின்னர் அறியத் தரப்படும்




0 Responses to கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல்: தமிழீழமே தீர்வு என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com