Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்று சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள ஊடகவியலாளர்களை சந்தித்த ஈபிடிபி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிர்வரவுள்ள சிறிலங்காவின் அரச தலைவர் தேர்தல் தொடர்பாகவும் தமது கட்சியின் கொள்கைகள் தொடர்பாகவும் விளக்கமளிததார்.

இனிமேல் இணக்க அரசியல் மூலமே தமிழ் மக்கள் தமது உரிமைகளை பெறமுடியும் எனவும் மகிந்தவுக்கு இன்னொரு சந்தர்ப்பத்தை வழங்குமாறும் கேட்டுக்கொண்டார். அத்தோடு தற்போது பசிக்கு கஞ்சிதான் வேண்டும் என்றும் அதனை முதலில் பெற்றுக்கொள்வோம். அது கிடைத்ததும் சோறு கேட்போம் என்றும் அதன் பின்னர் புரியாணி கேட்போம் எனவும் தனது கொள்கைவிளக்கத்தை வெளிப்படுத்தினார்.

தற்போது அரச தலைவர் தேர்தலில் போட்டியிடும் சிவாஜிலிங்கம், தான் நாட்டுக்கு இந்தியாவிலிருந்து திரும்பிவரும்போது பிரச்சனைகளை ஏற்படுத்தாவிட்டால் மகிந்தவுக்கு எதிர்வரவுள்ள தேர்தலில் ஆதரவளிப்பேன் என உறுதிகூறியே வந்ததாகவும் இன்னொரு கேள்விக்கு பதிலளித்த டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to முதலில் கஞ்சி கேட்போம் பின்பு சோறு கேட்போம் அதன் பின்னர் புரியாணி கேட்போம்: டக்ளஸ் கொள்கை விளக்கம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com