Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஈழத்தமிழர்களின் துயரத்தை இந்திய, தமிழக அரசுகளுக்கும் உலகிற்கும் உணர்த்துவதற்காக தன்னுடைய இன்னுயிரை ஈந்தவீரத் தமிழ்மகன்' முத்துக்குமார் அவர்களின் தன்னிகரற்ற தியாகத்தைத் தொடர்ந்து 19 பேர் தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் தங்கள் வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரின் தியாக உணர்வு தமிழகத்தில் மட்டுமல்ல உலகம் பூராவும் கொழுந்துவிட்டு எரிந்தது. இவ் வீரத்தமிழ் மகனின் முதலாம் ஆண்டு நினைவு நாள் வருகின்ற 29-01-2010 அன்று கனடியத்தமிழ் மாணவர், சமூகம் கனடியத் தமிழர் சமூகம் ஆகிய அமைப்புக்களினால் முன்னெடுக்கப்படுகின்றது.

ரொறன்ரோவில் 733 Birchmount Roadல் அமைந்துள்ள கந்தசாமி கோவில் மண்டபத்தில் 29-ஜனவரி-2010 அன்று வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகியர்கள் நினைவு நாள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

தீயாய் பூத்த தீந்தமிழ் ஈகிகளுக்குவீரவணக்கம்



0 Responses to கனடாவில் முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகியர்கள் நினைவு நாள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com