சிறிலங்காவின் ஆறாவது அரசதலைவர் தேர்தலில் இதுவரை அறிவிக்கப்பட்ட முடிவுகளில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த ராஜபக்ச முன்னிலை வகிக்கிறார். இதுவரை கிடைக்கப்பெற்ற ஒன்பது தேர்தல் தொகுதிகளின் முடிவுகளில் ஏழு தொகுதிகளில் மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றுள்ளார். மகிந்த ராஜபக்ச 378 037 வாக்குகளையும் சரத் பொன்சேகா 239 766 வாக்குகளையும் பெற்றுள்ளார்.தேர்தலின் முக்கிய அம்சமாக சரத் பொன்சேகா தனது சொந்த தேர்தல் தொகுதியான அம்பலாங்கொடவிலேயே தோல்வியடைந்தார். அம்பலாங்கொடவில் மகிந்தவுக்கு 33 489 வாக்குகளும் பொன்சேகாவுக்கு 11 191 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
மாவட்ட ரீதியான வாக்கு முடிவுகளில் தெவிநுவர, செங்கடகல, பலப்பிட்டிய, கலகதெர, ஹாலியெல, மொனராகலை தொகுதிகளில் மகிந்த ராஜபக்சவும் கணடியிலும் காலியிலும் சரத் பொன்சேகாவும் முன்னிலை வகிக்கிறார்கள்.



0 Responses to ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகிந்த முன்னணி: சொந்த தொகுதியிலேயே பொன்சேகா தோல்வி!