சிறிலங்காவின் ஆறாவது அரசதலைவர் தேர்தலில் மகிந்த ராஜபக்ச 57.88 விழுக்காடு வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார். தேர்தல் ஆணையாளர் இன்று மாலை விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி மகிந்த ராஜபக்ச 60 லட்சத்து 15 ஆயிரத்து 934 வாக்குகளை பெற்றுள்ளார் என்றும் அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரதான வேட்பாளரான பொன்சேகா 41 லட்சத்து 73 ஆயிரத்து 185 வாக்குகளை பெற்றுள்ளார்.நேற்று முன்னிரவு முதல் நடைபெற்ற வாக்கு எண்ணும் பணி இன்று மாலை நிறைவுபெற்றது. இதனைஅடுத்து, தேர்தல் ஆணையாளர் இன்று மாலை தேர்தல் முடிவை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.
சிறிலங்காவின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய அரச அதிபராக ஜே.ஆர். ஜெயவர்த்தனவும் அவரை அடுத்து ரணசிங்க பிரேமதாஸவும் பின்னர் டி.பி. விஜயதுங்கவும் அவரை தொடர்ந்து இரண்டு பதவிக்காலங்களாக சந்திரிகா குமாரதுங்கவும் பதவி வகித்தார்கள்.
கடந்த 2005 ஆம் ஆண்டு நவம்பர் 19 ஆம் திகதி தேர்தலில் வெற்றிபெற்று ஐந்தாவது நிறைவுற்று அதிகாரமுடைய அரசஅதிபராக வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்ச தற்போது தனது இரண்டாவது பதவிக்காலத்திலும் ஆட்சி நடத்துவதற்கு மக்கள் அங்கீகாரத்தை பெற்றுள்ளார். இவரது பதவிக்காலம் 2015 ஆம் ஆண்டுவரை நீடிக்கும்.



0 Responses to 70 விழுக்காடு தமிழர் தாயக வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட மகிந்த சிறிலங்காவின் ஆறாவது அரசதலைவராக தெரிவு!