Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அரசதலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மகிந்த ராஜபக்சவுக்கு இந்திய அரசதலைவர் பிரதீபா பட்டேல் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். தொடரும் மகிந்தவின் ஆட்சியின் கீழ் சிறிலங்காவில் நீடித்த சமாதானமும் நாட்டின் உயர்வும் அடையப்படும் என்று தான் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தலில் வெற்றி பெற்ற மகிந்தவுக்கு இந்திய அரசதலைவர் அனுப்பி வைத்துள்ள வாழ்த்து செய்தியில் மேலும் தெரிவிக்கையில் -

சிறிலங்காவும் இந்தியாவும் வரலாற்று ரீதியாக ஆழமான உறவை பேணி வருபவை. அந்த வகையில் சிறிலங்காவுடன் இணைந்து செயற்படுவதன் மூலம் இருநாடுகளின் மக்களுக்கும் மேலும் பயனுள்ள வாழ்வை உருவாக்கும் பாதையில் பணி புரிவதற்கு இந்தியா தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மகிந்தவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு: இந்தியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com