இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்துகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தனது உரையில் தனித்தமிழீழம் அமையவேண்டும் என்பதற்காக தன் உயிரை ஈகம் செய்தவன் முத்துக்குமார்.
அன்று ஏற்றிவைத்த நெருப்பு இன்னும் அணையவில்லை முத்துக்குமார் தொடக்கிவைத்த தீ அவர்களின் ஈகம் வீண்போகாது அவர்கள் ஏற்றிவைத்துள்ள தமிழீழ நெருப்பு மீண்டும் எழும். தமிழீழதேசம் மீண்டும் மலரும், இது உறுதி, தமிழீழ மண்ணிற்காக மாவீரர்கள் செய்த தியாகம் வீண்போகாது ஈழத்தமிழர்களை மீண்டும் தட்டி எழுப்பவும் கட்டி அமைக்கவும் தாய்த் தமிழகம் துணையிருக்கும், ஈழத்தில் சிறீலங்காப்படையினரால் முள்வேலிக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தமிழர்களை முழுமையாக விடுதலைசெய்ய வேண்டுகின்றோம், தமிழர்தாயக பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்கள் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.
முத்துக்குமார் உள்ளிட்ட 19 ஈகைப்பேரெளிகளின் வணக்கநிழ்வு நேற்று மாலை சென்னை பெரவள்ளுர் சதுக்கத்தில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது. இதில் மா.தி.மு.கா. பொதுச்செயலாளர் வைகோ, மருத்துவர் ராமாதாஸ், தா.பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு உரைநிகழ்தியுள்ளார்கள்.
கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழநெடுமாறன் அவர்கள் உரை நிகழ்தியுள்ளார். முத்துக்குமாரின் ஈகம் வீண்போகாது தேய்வடைந்துள்ள விடுதலைப் போராட்டாம் புதிய எழுச்சியுடன் மீண்டும் எழும், ஈழத்தமிழர்களின் வாழ்வில் உண்மையான விடிவு வேண்டுமெனில் தமிழீழம் மலரவேண்டும், அது ஒன்றேதான் தீர்வு அதற்காக முத்துக்குமார் உள்ளிட்ட ஈகைப் பேரெளிகளின் அர்பணிப்பு துணைநிக்கும் என்று பழ நெடுமாறன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பன்நாடுகளிலும் ஈகைப்பேரெளிகளுக்கான வணக்க நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. பிரித்தானியாவில் நடைபெற்ற நிகழ்வில் தமிழகத்தின் தமிழ் உணர்வாளர்கள் ஈழத்தமிழ் மக்கள் எனபலர் கலந்துகொண்டு வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.



0 Responses to தமிழீழ நெருப்பு மீண்டும் எழும்: வைகோ