Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா அரசதலைவர் வேட்பாளராக போட்டியிடும்வரை வழங்கிய அனைத்து வசதிகளையும் மிளப்பெற்றுக்கொள்ள முடிவெடுத்துள்ள அரசு, இதுவரை காலமும் அவர் பயன்படுத்திய வீடு மற்றும் தொலைபேசி உட்பட அனைத்துக்கும் வாடையை அறவிடவும் தீர்மானித்துள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இராணுவத்திலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் கொழும்பு புல்லர்ஸ் வீதியில் உள்ள ஜெனரல் இல்லத்தை சரத் பொன்சேகா தொடர்ந்து பயன்படுத்தி வந்தார் என்றம் இதை விட அவர் பயன்படுத்தி செய்மதி தொலைபேசி கட்டணம் தற்போது 20 லட்சத்து 82 ஆயிரத்து 995 ரூபாவாக உள்ளது என்றும் வீட்டு வாடகையுடன் அனைத்து கட்டணங்களையும் அவரிடம் வசூலிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளதாகவும் அந்த பணத்தை அவருக்கு வழங்கப்பட்ட மாதாந்த ஓய்வூதிய பணத்திலிருந்து அறவிடுவதற்கு அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சரத் பொன்சேகாவுக்கு இதுவரை வழங்கப்பட்ட பாதுகாப்பு உத்தியோகத்தார்கள் அனைவரும் அரசினால் மீளப்பெற்றுக்கொள்ளப்படுவார்கள் என்றும் அவருக்கு தொடர்ந்து பாதுகாப்பு தேவையெனில் பாதுகாப்பு அமைச்சின் செயலரிடம் எழுத்து மூலம் கோரிக்கையை முன்வைக்கலாம் என்றும் அரசு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பொன்சேகாவின் செயலர் என்று கூறப்பட்ட - சிறிலங்கா இராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட - கப்டன் சக சில்வா என்பவர் பல சட்ட விரோத நடவடிக்கைகளுடன் தொடர்புடையவர் என்று இனம்காணப்பட்டதாலேயே இராணுவத்திலிருந்து நீக்கப்பட்டார் என்றும் அவரை கைது செய்வதற்கு காவல்துறை நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஆரம்பித்தது சரத் பொன்சேகாவுக்கு எதிரான பழிவாங்கும் படலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com