பிரித்தானியாவில் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவெழுச்சி நாள் 29-01-2010 வெள்ளி அன்று நடைபெறவுள்ளது.இலங்கையில் நடைபெற்ற இறுதியுத்தத்தின் போது அப்பாவிமக்கள் ஆயிரக்கணக்கில் ஸ்ரீலங்கா இராணுவத்தினால் கொன்று குவிக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலை கண்டும் சர்வதேச சமூகம் பாராமுகமாக இருந்ததை கண்டு வேதனையோடு கொதித்தெழுந்த வீரத்தமிழ்மகன் முத்துக்குமார் சர்வதேச சமூகத்திற்கும், உலகெங்கும் வாழ் தமிழர்களுக்குமென அறிக்கையை எழுதிவைத்து விட்டு தமிழ்நாட்டில் தன்னை தானே எரித்து உலகின் பார்வையை தமிழர் பக்கமும், இலங்கையில் நடைபெற்றுவரும் இனப்படுகொலையின் பக்கமும் திசை திருப்பி வரலாற்றில் மிக உன்னத தியாகம் நிறைந்த தன் கடமையை செய்திருந்தார்.
இந்தியா, சுவிஸ், மலேசியா ஆகிய நாடுகளில் முத்துக்குமார் முதல் முருகதாஸ் வரை 14 தமிழர்கள் தமிழர் விடுதலைக்காக தம்மையே எரித்து தியாக சீலர்கள் ஆனார்கள். தமிழர் விடுதலைக்காகவும், தமிழின அடக்குமுறைக்கு எதிராகவும் தன்னையே எரித்த முதல் தமிழன் வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வுகள் உலகின் பல நாடுகளிலும் நடைபெற இருக்கிறது.
பிரித்தானியத் தலைநகர் இலண்டனிலும் 29-01-2010 வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணி முதல் 9:00 மணி வரை ஈஸ்ட்காம் பகுதியிலுள்ள அக்சியா லோன்ஞ் எனும் இடத்தில் நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்வில் பிரித்தானியா வாழ் தமிழ் மக்கள் அனைவரையும் வந்துன் கலந்து கொண்டு வீரத்தமிழ்மகன் முத்துக்குமாருக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தும் வண்ணம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளன.
நிகழ்வு நடைபெறும் இடம்:
AKSIA LOUNGE,
SOUTH END ROAD,
EASTHAM,
E6 2AA
நேரம்: 06:00PM - 09:00PM
காலம்: 29-01-2010



0 Responses to இலண்டனில் வீரத்தமிழ் மகன் முத்துக்குமார் நினைவெழுச்சி நாள்