Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நேற்றய தினம் நடைபெற்ற ஐனாதிபதித் தேர்தல் மூலம் தமிழ் தேசமும் சிங்கள தேசமும் இரு துருவப்படட செய்திகளை சர்வதேச சமூகத்திற்கும், தமிழர்களிடையே தம்மை புத்தியீவிகள் என்று கூறிக் கொள்பவர்களுக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் கூறியுள்ளது.

தமிழர்களுக்கு எந்தவிதமான உரிமைகளையும் வழங்க தாம் தாயராக இல்லை என்பதனை சிங்கள தேசம் தெளிவுபடுத்தியுள்ளது.

அதேவேளை சிங்கள பௌத்த பேரினவாதம் தமிழர்களுக்கு தாமாக எதனையும் தரப்போவதில்லை என்பதனையும் இனியும் சிங்களத் தலைமைகளை தாம் நம்பத் தயாராக இல்லை என்பதுடன் தாம் உயிராக நேசிக்கும் தலைவர் பிரபாகரனுக்கும், தேசத்திற்காக உயிர்கொடுத்த மாவீரச் செல்வங்களுக்கு தாம் துரோகமிழைக்க மாட்டோம் என்பதனையும்

கடந்த 33 வருடகால போராட்டத்தின் பொழுது உயிர் கொடுத்தவர்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ள அதிகாரப் பகிர்வு என்ற தீர்வு யோசனையை தாம் நிராகரிக்கின்றோம் என்பதனையும் தமிழ் தேசம் தெளிவாக உணர்த்தியுள்ள தேர்தலாக இந்த தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன.

கடந்த 2005 ம் ஆண்டு விடுதலைப் புலிகள் எடுத்த முடிவு தமிழ் மக்களை பேரவலத்திற்குள் தள்ளியுள்ளதாக விடுதலைப் புலிகள் மீது வசை பாடியவர்கள் விடுதலைப் புலிகளை பழமைவாதிகள் என்றும் பாசிச வாதிகள் என்றும் கூறியதுடன் அவர்கள் கற்றறிந்தவர்களின் கருத்துக்களுக்கு ஒருபொழுதும் மதிப்பளிப்பதில்லை என்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.

இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தவர்கள் ஒன்று கூடி தமது புலமைகள், அனுபவம் அறிவு இராசதந்திரம் அனைத்தையும் ஒன்று திரட்டி சரத்பொன்சேகா என்ற கொலையாளியை தமிழ் மக்களின் அவதார புருசனாக உருவகப்படுத்தி அவருக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களுக்கு காட்டியவழி இன்று போரால் பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் மகிந்தவின் தீராப் பகையாளிகளாக மாற்றிவிட்டுள்ளது.

தென்னிலங்கையில் உள்ள சிங்கள பௌத்த தேசியவாதத்தின் மன உணர்வுகளை மதிப்பிடத் தெரியாத புத்தியீவிகளுக்கும், தமிழ் அரசியல் வாதிகளுக்கும் தமிழ் மக்களின் உண்மையான உணர்வுகளை கூட மதிப்பிடத் தெரியவில்லை.

விடுதலைப் புலிகளின் தலைமை கடந்த காலங்களில் இனத்தின் நன்மையை மட்டும் கருத்தில் கொண்டு சரியான ஆனால் கடுமையான தீர்மானங்களை மேற்கொண்ட சந்தற்பங்களில் அதனை புரிந்து கொள்ளும் ஆற்றல் இல்லாதவர்கள் அந்த முடிவுகள் பற்றி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தனர். குறிப்பாக சர்வதேச சமூகத்தினருடன் தொடர்புகளை பேணும் ஆற்றலுள்ளவர்களாக இருந்த ஆங்கிலம் பேசத் தெரிந்த மற்றும் குறிப்பிட்ட ஒரு துறையில் பட்டம் பெற்றவர்களாக இருந்த தமிழ் தரப்புக்கள் தமது குறுகிய அறிவுக்கு புலப்பட்ட வியாக்கியானங்களை சர்வதேச சமூகத்திற்கு முன்மொழிந்து வந்ததன் விளைவு விடுதலைப் புலிகள் இயக்கம் பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கப்பட்டு அது அழிக்கப்பட்டே ஆகிவேண்டிய ஒன்று என்ற முடிவுக்கு தூதுவர்களையும் வெளிநாட்டு கொள்கை வகுப்பாளர்களையும் தள்ளியது.

ஆக விடுதலைப் புலிகளது பலம் அழிக்கப்பட்டமைக்கும் முள்ளிவாய்க்காலில் 75000 வரையான மக்கள் கொல்லப்பட்டமைக்கும் குறிப்பிட்ட சில தமிழ் புத்தியீவிகளும், தமிழ் கூட்டமைப்பினரும் தமது அறியாமையை அடிப்படையாக கொண்டு மேற்கொண்ட திரை மறைவு பிரசாரங்களே காரணமாக அமைந்தது.

படுகொலையாளியான சரத்பொன்கோவை நியாயப்படுத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பயன்படுத்திய வார்த்தை யாலங்களில் 25 வீதத்தினை அன்று 2005 ம் ஆண்டில் சனாதிபதித் தேர்தல் தொடர்பாக விடுதலைப் புலிகள் எடுத்த முடிவை நியாயப்படுத்தவும், சிறுவர் ஆட்சேர்ப்புத் தொடர்பாகவும், கரும்புலித் தாக்குதல்கள் தொடர்பாகவும் நியாயப்படுத்தும் முயற்சியில் சர்வதேச சமூகத்தினர் மத்தியில் பயன்படுத்தியிருந்தால் இன்று தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு இந்த நிலை ஏற்பட்டிருக்காது.

மொத்தத்தில் அப்பாவிகளான தமிழ் மக்கள் நிர்க்கதியான நிலையில் இருந்தாலும் தமது வாக்கு என்ற ஆயுதத்தினை சரியாகப் பயன்படுத்தி தமிழ் தேசியம் என்பதனை வெறும் உதட்டளவில் உச்சரித்து சர்வதேச சக்திகளினதும், சிங்கள இனவாத சக்திகளினதும் நலன்களுக்காக செயற்பட்டு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அழிவுக்கு துணை நின்று தமிழ் மக்களை பலிக்கடாக்களாக்கி வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், புத்தியீவிகள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களுக்கும். மிகவும் நல்ல பாடத்தினை இந்த தேர்தலில் புகட்டியுள்ளனர்.

இனியாவது இவர்கள் தமிழ் மக்களின் நலன் சார்ந்து முடிவு எடுக்க வேண்டும் அல்லது கௌரவமாக ஒதுங்கிக் கொள்ள வேண்டும்.

நன்றி

இயக்கச்சி மாணிக்கம்

0 Responses to த.தே கூட்டமைப்புக்கும் பாடம் புகட்டியுள்ள தமிழ் தேச மக்களின் தேர்தல் தீர்ப்பு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com