தாயகத்தில் இன அழிப்பின் உச்சகட்டமான இறுதி யுத்தக் காலப்பகுதியில் உலகெங்கும் வாழ்ந்த தமிழ் உணர்வாளர்கள் பல்வேறு வடிவங்களில் இன அழிப்பு போரை நிறுத்த போராட்டங்களில் ஈடுபட்டனர்.உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பட்டங்கள் பேரணிகள் சாலைமறியல் மற்றும் கவனயீர்ப்பு போராட்டம் என்று தமிழீழ தாயகத்தில் சாவின் விழிம்பில் தவிதுக்கொண்ருடிந்த எங்கள் தொப்பிள் கொடி உறவுகளை காப்பாற்ற உலகமெங்கிலும் மக்கள் திரண்டனர் .
அந்த இக்கட்டான வேளையில் அதாவது ஜனவரி 29ம் திகதி இந்தியா மற்றும் உலகை ஒரு கணம் என் தாயக போரின் பால் கவனத்தை திருப்பிய ஒரு சரித்திர நிகழ்வை தியாகி முத்துக்குமாரன் அவர்களால் செய்துமுடிக்கப்படிருந்தது . அவரின் தியாகத்தை வார்த்தைகளுக்குள் அடக்கமுடியாது. அவரின் தீக்குளிப்பால் உறங்கிடந்த தாய் தமிழகம் விழித்துக்கொண்டது.
தியாகிகள் உருவாக்கப்படுவதில்லை. அவர்கள் தியாகிகளாகவே பிறக்கின்றனர் .தன் இனத்தின் மீது நடத்தப்படும் ஒரு அக்கிரமமான ஒரு போரை தடுக்க அவர் தன் இன் உயிரை தீக்குள் சங்கமித்து உவந்தழிக்கின்றார் . ஒரு இனத்தின் விடுதலை பல தியாகங்களில் ஊடாக வெற்றி பெற்றிருக்கின்றது என்பது ஒரு வரலாறு ஆனால் தமிழீழ விடுதலைப்போரில் தியாகம் என்னும் சொல்லுக்கு அப்பால் ஒருபடி கடந்து தமிழ்மக்கள் போராடிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது சொல்லி தெரியவேண்டிய அவசியமில்லை.
தியாகி முத்துக்குமாரன் தன் இனத்தின் மீது கொண்டபற்றை எப்படி சொல்வது? நாங்கள் தெய்வங்களைதேடி கோவில் குளம் என்று அலைகின்றோம் தெய்வங்கள் அங்கு இருப்பதாய் தெரியவில்லை. ஆனால் உண்மையான தெய்வங்கள் எல்லாம் முத்துக்குமார் போல தியாகிகளின் உருவங்களில் எங்களோடு இருப்பது மட்டும் உண்மை தமிழ்மீது தமிழ் இனம் மீதும் கொண்ட பற்றுக்காக தியாகி முத்துக்குமார் தன் உயிரை தீயினில் உருக்கி உலகத்துக்கு ஒரு விடயத்தை சொல்லிப்போயிருக்கின்றார். ஓவ்வொரு தமிழரும் எரிமலை என்று.
தமிழீழ தாயகம் என்ற இலட்ச்சிய சுடரில் தன்னையும் ஆகுதியாக்கிய எங்க முத்துக்குமரனுக்கும் மற்றும் இதுவரைகாலவும் தாயக விடுதலைப்போரில் தங்கள் இன்னுயிர்களை ஆகுதியாக்கிகொண்ட அனைத்து மாவீரர்களுக்கும் எங்கள் வீரவணக்கம் அனைவரும் பேதங்கள் மறந்து ஒன்றாய் இணைந்து இந்த இலச்சியவாதிகளின் இலச்சியத்தை அடைவோம் என்று இந்த நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்.



0 Responses to தமிழீழ இலட்ச்சிய சுடரில் தன்னையும் ஆகுதியாக்கியவன் முத்துக்குமரன்