Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற குழுத்தலைவர் இரா.சம்பந்தன் உட்பட மூன்று கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூவரை படுகொலை செய்வதற்கு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தலைமையிலான குழுவினர் இரகசிய கூட்டமொன்றில் திட்டமிட்டுள்ளனர் என்று குளோபல் தமிழ் செய்தி என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமைச்சர் முரளிதரன் தலைமையிலான இந்த இரகசிய கூட்டம் மட்டக்களப்பு வாடிவீட்டில் கடந்த 27 ஆம் திகதி இடம்பெற்றதாகவும் இந்த கூட்டத்தில் சிறிலங்கா சுதந்திர கட்சியின் அம்பாறை அமைப்பாளர் இனியபாரதி, அமைச்சர் அமீர் அலி, கிழக்கு மாகாண முதலமைச்சர் பிள்ளையான், புலியன், வீரா, முகிலன் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டம் இரண்டு அமர்வுகளாக இடம்பெற்றதாகவும் முதலாவது கூட்டத்தில் கிழக்கில் அரசதலைவர் மகிந்தவுக்கு வாக்குகள் கிடைக்காதது ஏன் என்பது குறித்து ஆராயப்பட்டதாகவும் இரண்டாவது அமர்வில் கூட்டமைப்பு எம்.பிக்களான இரா.சம்பந்தன், அரியநேந்திரன் சந்திரநேரு மற்றும் தோமஸ் ஆகியோரை படுகொலை செய்வதற்கான திட்டம் தீட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மட்டக்களப்பு மேயர் சிவகீதா பிரபாகரனை பதவி நீக்கிவிட்டு அரசு ஆதரவாளரான ஜோர்ஜ் பிள்ளையை நியமிப்பது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to கருணா தலைமையில் சம்பந்தன் உட்பட மூன்று கூட்டமைப்பு எம்.பிக்களை போட்டுத்தள்ள இரகசிய திட்டம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com