நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு சுவிஸ் நாட்டில் இருந்து தெரிவு செய்யப்படவேண்டிய பத்துப் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக மே மாதம் 2 ஆம் திகதி நடாத்தப்படுகின்ற தேர்தலில் 7 தேர்தல் தொகுதிகளில் 19 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக சுவிஸ் தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது.
இத் தேர்தலில் போட்டியிடுவதற்காகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வேட்புமனுக்கள் தேர்தல் ஆணையாளார் திரு. கார்த்திகேயபிள்ளை ஆனந்தநடராசா (யாழ்ப்பாணம் மற்றும் பெரதெனியா பல்கலைக்கழகங்களின் முன்னாள் விரிவுரையாளர்) அவர்களால் பரிசீலனை செய்யப்பட்டு பின்வரும் வேட்பாளர்கள் இத் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தகுதியுடையவர்களெனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக கடந்த 25.04.2010 ஞாயிற்றுக்கிழமையன்று பேர்ண் நகரில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் வேட்பாளர்கள் அறிமுகம் இடம் பெற்றதோடுää இவர்கள் வேட்பாளர்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டமைக்கான உறுதிப்பத்திரமும் தேர்தல் ஆணையாளாரால் கையளிக்கப்பட்டது.
சுவிஸில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு போட்டியிடும் வேட்பாளர்கள்; விபரங்கள் பின்வருமாறு:
தேர்தல் தொகுதி 1 : Bern, Solothurn – 2 பிரதிநிதிகள்
கிருஷ்ணசாமி திலீபன்
புத்திரசிகாமணி சுகன்யா
செல்வரத்தினம் சுரேஸ்
வீரகத்தி சுந்தரலிங்கம்
தேர்தல் தொகுதி 2 : Zurich, Schaffhausen, Thurgau – 2 பிரதிநிதிகள்
மார்க்கண்டு தேவராஜா
செல்வராஜா ஜெயம்
ஆழ்வாபிள்ளை தயானந்
விஸ்வலிங்கம் இளங்கோ
இராமநாதன் சிறிதரன்
தேர்தல் தொகுதி 3 Basel, Aargau, Jura – 1 பிரதிநிதி
மகாலிங்கம் பாஸ்கரலிங்கம்
தேர்தல் தொகுதி 4 : Luzern, Zug, Nidwalden, Obwalden, Schwyz, Uri – 1 பிரதிநிதி
கணபதிப்பிள்ளை ருத்திரன்
பாலச்சந்திரன் அமுதகரன்
பாலன் சிவபாதம்
தேர்தல் தொகுதி 5 : Vaud, Valais, Genève, Fribourg, Neuchâtel – 2 பிரதிநிதிகள்
சின்னத்தம்பி ரஜனிதேவி
முருகையா சுகிந்தன்
தேர்தல் தொகுதி 6 : Graubünden, Glarus, St.-Gallen, Apenzeller- 1 பிரதிநிதி
முத்துக்குமார் சுந்தர்ராஜா
சிவராஜா சிறிசயீதா
தேர்தல் தொகுதி 7 : Tessin / Ticino – 1 பிரதிநிதி
அருளானந்தம் தெய்வேந்திரன்
செல்லத்துரை மகேந்திரபிள்ளை
வெளியீடு:
அனைத்துலகச் செயலகம்
தொடர்புகளுக்கு: info@govtamileelam.org



0 Responses to சுவிஸில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு 19 வேட்பாளர்கள் போட்டி