Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மே 2, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள நாடு கடந்த அரசிற்கான தேர்தலில் ஒன்ராரியோ மற்றும் கியூபெக் மாநிலங்களில் வாழும் ஈழத்தமிழர்கள் அனைவரையும் தவறாது வாக்களிக்குமாறு கனடிய தமிழர் தேசிய அவைக்கான செயற்குழு வேண்டியுள்ளது.

வரலாற்றுச் சவாலை எதிர்கொண்டு நிற்கும் ஈழத்தமிழினத்தின் வலுநிலையாக மாறியுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் செயற்பாடுகளில் வலுவுள்ள சர்வதேச கட்டுமானமாக மாறியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசை அதன் தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டு பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதினூடாக வலுப்படுத்தலாம் என்பதை கனடிய தமிழர் தேசிய அவைக்கான செயற்குழு வலியுறுத்தி நிற்கின்றது.

மே 2 தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் பாராட்டுதல்களையும், வாழ்த்துக்கையும் தெரிவித்துக் கொள்ளும் கனடிய தமிழர் தேசிய அவைக்கான செயற்குழு, வெற்றி தோல்விகளைக் கடந்து தமிழின செயற்பாட்டில் அவர்களை தொடர்ந்தும் ஈடுபடுத்திக் கொள்ளுமாறும் உரிமையுடன் வேண்டிக் கொள்கிறது.

மே 3 முதல் முன்னெடுக்கப்படும் வலிசுமந்த மாதம் நிகழ்வுகளில் அனைத்து தமிழர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அழைக்கும் அதேவேளை கனடிய தமிழர் தேசிய அவைக்கான தேர்தல் குறித்த முழுமையான விபரங்கள் வரும் வாரம் கனடிய தமிழ் மக்களுக்கு அறியத்தரப்படும் எனவும் கனடிய தமிழர் தேசிய அவைக்கான செயற்குழு மேலும் தெரிவித்துள்ளது.

0 Responses to மே 2, தவறாது வாக்களியுங்கள்: கனடிய தேசிய அவைக்கான செயற்குழு அறைகூவல்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com