Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கடந்த ஆண்டு வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத பாரிய இனப்படுகொலையை ஸ்ரீலங்கா அரசாங்கம் தமிழர்கள் மீது நிகழ்த்தியிருந்தது மே மாதத்தை வலிசுமந்த மாதமாக அறிவித்து கனடியத் தமிழ் இளையவர்கள் பல நிகழ்வுகளை ஏற்பாடு செய்துளார்கள்.

அதில் ஓர் அங்கமாக அவ் இனப்படுகொலையை செய்த அரசாங்கத்தை சர்வதேச நீதிமன்றில் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் படுகொலை செய்யப்பட்ட மக்களை நினைவு கூறும் முக்கமாகவும் கனடியத் தமிழ் இளையவர்கள் நான்காவது நாளாக தொடர் போராடமாக முன்னெடுத்துவருகின்றனர் .

அமெரிக்க துணைத்த்தூதுவரலயம் முன்பாக கூடிய இளையவர்கள் எமதுமக்களின் துயரங்களை சர்வ்தேதுக்கு எடுத்துகாடும் முகமாவும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தை போர் குற்றவியல் விசாரணைகளை சர்வதேசம் மேற்கொள்ளவேண்டும் என்றும் பதாதைகளை தாங்கியவாறு நின்றனர்.

இதன்படி ரொறொண்டோ வில் உள்ள அமெரிக்க துனைத்தூதுவரலயம் முன்பாக கூடிய மக்கள் தமது கவனயீர்ப்பு நிகழ்வை தமது வாயில் கறுப்பு துணியால் கட்டியவாறு பங்குகொண்டனர்.

இவ் கவனயீர்ப்பு நிகழ்வு நாள்தோறும் மே 1 முதல் மே 19 தொடந்து நடைபெறவுள்ளது எனபது குறிப்படத்தக்கது

0 Responses to “வலி சுமந்த மாதம்” கவனயீர்ப்பு நிகழ்வின் நான்காம் நாள் (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com